Friday, July 22, 2011
Caste and Nationalism by Prof Satyapal
part2: http://www.youtube.com/watch?v=-q9LxoVdbnc
part3: http://www.youtube.com/watch?v=uCv-Ap5M9Ew
part4: http://www.youtube.com/watch?v=9zVjliPGOgE
part5 : http://www.youtube.com/watch?v=GA95joI9VTQ
part6: http://www.youtube.com/watch?v=67i6wBCXHss
part7: http://www.youtube.com/watch?v=QLJigPVRF_A
part8: http://www.youtube.com/watch?v=PkgKJMz38j4
part9: http://www.youtube.com/watch?v=rayT9YwsHnE
part10: http://www.youtube.com/watch?v=duL_F2N2pDU
part11: http://www.youtube.com/watch?v=NtQMgXNkkuE
part12: http://www.youtube.com/watch?v=BmHePJxjtW0
part13: http://www.youtube.com/watch?v=JB5haLxVJzk
Monday, July 18, 2011
Tuesday, June 21, 2011
CPI calls for all India solidarity with Tamils in the island of Sri Lanka
The CPI demonstration for solidarity with Tamils in the island is likely to take place at least in 25 state capitals in India, sources close to the CPI said.
Full text of the resolution passed by the National Council of the Communist Party of India in New Delhi follows:
COMMUNIST PARTY OF INDIA
National Council Meeting: 18-19, June, 2011
New Delhi.
ON SRILANKAN TAMILS
The Communist Party of India demands the government of India to take note of the serious revelations about the mass murder perpetrated by the Sri Lankan army on Tamil population during the last phase of the long drawn ethnic strife that had been going on as a civil war in Sri Lanka – which was declared as won by the Sri Lanka government in the year 2009, on May 19th at Mullaitheevu area.
Videographed information regarding the sad episode at Mullaitheevu, where 45,000, Tamil speaking civilians had been enmasse massacred through serial bombing, and cluster bombs in utter disregard to international law and ethics. Thereby the Srilankan army had violated human rights and had indulged in state terrorism.
As the Srilankan authorities had banned the entry of print and electronic media, including the UN Observers and the Norwegian Peace Promoting Team, this heinous crime against the innocent civilians could come only now from voluntary investigating organisations. The recent revelations with authentic documentary evidence, prove that there had been a planned attack to physically eliminate the linguistic miniorities from the Island Nation.
As the reports reveal most inhuman treatment meted out even to the injured citizens, a worldwide demand for a fair, open trial to find out the real culprits and render justice to the unpitied victims who have been killed for no fault of theirs has come to the fore. Hence the CPI demands the Central Government to take appropriate steps to support and facilitate for an open enquiry into the war crimes alleged to have taken place in Srilanka, in the month of May, 2009. Even though the Srilankan government has announced as the war against terrorism won and ended yet from 2009 till this date, Lakhs of displaced Tamil civilians are kept inrehabilitation camps, which is a clear illegal detention. Hence the government of India, is requested to impress upon the Srilanka to dismantle the camps and release all the detained Tamilians to return to their native places and also permit the media to enter Srilanka to collect information about the Indian aided rehabilitation projects.
The CPI demands the government of India to consider and take it into account the Tamilnadu State Assembly Resolutions passed unanimously, on 7.6.2011.
The CPI resolves to observe All India Solidarity with Srilankan Tamils Day on 8th July 2011 to demand justice to the Srilankan Tamils and to press for peaceful political settlement to the ethnic conflict in Srilanka. It appeals to other Left and democratic Parties and forces to join in observing the day.
In this regard CPI decides to send a delegation to meet the Prime Minister to present te case for an open trial and for peaceful political solution to Srilankan Tamil question and to discharge the moral responsibility of India.
(thanks Tamilnet)
கொளத்தூர் மணி தலைமையில் அன்னூரில் ஆயிரம்குடங்களுடன் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டம்
அண்மைக்காலங்களில் பொதுக்குழாயில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்கத்தடை, செல்போன் பேசத் தடை, இரட்டைக்குவளைமுறை, சலூன்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டத்தடை, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்பட்ட பொதுச்சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரைப் புதைக்கத்தடை, மோட்டார்பைக் ஓட்டத்தடை என பல்வேறு தீண்டாமை வன்கொடுமைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. பெரியார் திராவிடர் கழகமும் தொடர்ந்து இவற்றுக்கு எதிராகப் போராடிவருகிறது.
கடந்த 12.06.11 அன்று மாலை 6.00 மணியளவில் அன்னூர் அருகேயுள்ள குருக்கிளையாம்பாளையம் என்ற கிராமத்தில் பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்கச்சென்ற வசந்தகுமார் என்ற மாணவனை ஆதிக்கஜாதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் தாமோதரன் என்பவரும் “சக்கிலியர்கள் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது” என மிரட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். செய்தியைக் கேள்விப்பட்ட உடனேயே மாலை 7.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்னூர் ஈஸ்வரன், ஜோதிராம் உட்பட நூற்றுக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் வன்கொடுமை நடந்த குருக்கிளையாம்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டப்பொறுப்பாளர்கள் வெள்ளமடை நாகராசு, மேட்டுப்பாளையம் சந்திரசேகர், தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் அன்னூர் காவல்நிலையத்தில் உரிய அதிகாரிகளைச் சந்தித்து தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர். அதன்பிறகு இரவு 1.00 மணிக்கு மேல்தான் எஃப்.ஐ.ஆ ரே போடப்பட்டது.
13.06.11 காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குறுக்கிளை யாம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து புகார் விண்ணப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தலித் மாணவனைத் தாக்கிய ஆதிக்கஜாதியினர் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. தண்ணீர் தடையும் நீக்கப்படவில்லை. இதுபற்றி நாளிதழ்களில் வெளியான செய்திகளை அறிந்து அதனடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இச்சிக்கலைக் கையில் எடுத்திருக்கிறது. தமிழக அரசுக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலித் சிறுவன் அவமானப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? இச்சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதா? பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா? இதுபோன்ற தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
என்பவை உள்ளிட்ட பல கேள்விகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வினவியுள்ளது.
கடந்த 21.05.11 அன்று அன்னூரில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் அன்னூர் ஒன்றியத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்னூர் ஒன்றியம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் என்னென்ன வகையான வன்கொடுமைகள் நடைமுறையில் உள்ளன என்பவை குறித்து விளக்கமான புள்ளிவிபரங்களுடன் கூடிய துண்டறிக்கையையும் தோழர்கள் விநியோகித் தனர். அதில் குருக்கிளையாம்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்க தடை உள்ளது என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளனர். இப்படிப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டுபிடித்துக் களைய வேண்டியது காவல்துறையின் கடமையாகும். ஆனால் பெரியார் திராவிடர் கழகம் கண்டறிந்து பட்டியல் போட்டு அதைத் துண்டறிக்கையாக விநியோகித்து ஆர்ப்பாட்டமே நடத்தியிருந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 21.05.11 ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் குருக்கிளையாம்பாளையத்தில் தலித் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தே இருக்காது.
இச்சூழலில் பெரியார் திராவிடர் கழகம் இதை முக்கியப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டுள்ளது. வரும் 27.06.11 திங்களன்று காலை 10 மணியளவில் குருக்கிளையாம்பாளையத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 1000 குடங்களுடன் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர்கள் கோவை கு.இராமக்கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் ப.பா.மோகன், நாடுகடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி ஆகியோர் உட்பட பல்வேறு தோழமை இயக்கங்களும் இந்த மனிதஉரிமைப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. அனைத்து முற்போக்குஇயக்கங்களும், தோழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அவசியம் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சாத் தர்மத்தோடும் இருக்கவேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும் இம் மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா என்பதும் எனக்கு விளங்கவில்லை. “
பெரியார் - குடி அரசு - 02.12.1928
Sunday, June 12, 2011
சிவசங்கரமேனன் - சுபிரமணிசாமிக்கு கண்டனம்.
ராஜபக்சே போர்க் குற்றங்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவும் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத்தடை விதிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் - தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த தீர்மானத்தின் வழியாக தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளார், தமிழக முதலமைச்சர்.ஆனால், தமிழக முதல்வரை தீர்மானத்துக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் சந்தித்து பேசிவிட்டு அதிகாரிகள் குழுவோடு கொழும்பு சென்று ராஜபக்சேயை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழக முதல்வர் தம்மிடம் தெரிவித்த கருத்துகளையோ, ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களையோ ராஜபக்சேவிடம் பேசவில்லை என்று வெளிப்படையாக பேட்டி அளித்திருப்பது, சட்டசபைத் தீர்மானத்தின் உணர்வுகளையும், முதல்வரின் கருத்துகளையும் தமிழரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்தி அவமதித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக முதல்வரின் சட்டமன்றத் தீர்மானங்கள், தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழின விரோத சக்திகளை அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கட்சி - அணிகள் என்ற எல்லைக்கு அப்பாலும் இத் தீர்மானத்துக்காக தமிழக முதல்வரை அனைவரும் பாராட்டும் நிலையில், சுப்ரமணியசாமி போன்ற சில தனி மனிதர்கள், தமிழக முதல்வரை மிரட்டும் வகையில் உத்தரவுபோட தொடங்கியிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு, மின்வெட்டுப் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்துவதோடு முதல்வர் தமது கடைமையை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சுப்பிரமணியசாமி பேசுவது அவரது ஆணவத்தையே காட்டுகிறது. தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஒட்டு மொத்த தமிழினத்தையும் சுப்பிரமணியசாமி இப்படி ஆவணத்துடன் அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
சாட்சியம் இல்லாமல் மூன்று லட்சம் தமிழ் மக்கள் மீது இலங்கை இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்ட பிறகும், தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு ஆட்சிக்கு வந்த முதல்வர் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை என்று, சில தனி நபர்கள் பேசுவதை, வாக்களித்த மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சனையில் தமிழக முதல்வர் தீர்மானத்துக்கு ஆதரவாக தமிழினமே ஒருமித்து திரண்டு நிற்கிறது என்பதை எதிப்பாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
.
(கொளத்தூர் மணி )
தலைவர்
Monday, May 31, 2010
‘சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம்
நேரம்: மாலை 6 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை
வரவேற்புரை:
பத்திரிக்கையாளர் பாரதி தம்பி
கருத்துரை:
எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா
வழக்கறிஞர் சுந்தர்ராஜன்
பெண்ணியலாளர் ஓவியா
‘தலித் முரசு’ புனித பாண்டியன்
ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி
கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம்
கேள்வி நேரம்:
விவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்விதமாக கேள்வி நேரம் இடம்பெறும். பார்வையாளர்கள் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் பதிலளிப்பர்.
நன்றியுரை:
பாஸ்கர், கீற்று.காம்
சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது ‘எந்த சாதி பெரிய சாதி’ என எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்?
வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1931-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று ‘இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.
அதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா? ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம்.
இதையொட்டி கீற்று இணையதளத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அனைவரும் வருக!


